சிறுவர்கள் மத்தியில் புதிய வைரஸ் தொற்று!
சிறுவர்கள் மத்தியில் புதிய வைரஸ் தொற்று ஒன்று பரவிவருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
சிறுவர்கள் நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த வைரஸ் இன்புளுவன்சா ஏ மற்றும் பி என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நோய் தொடர்பான அறிகுறிகளைக் கொண்ட சிறுவர்களை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர் பெற்றோரிடம் கோரியுள்ளார்.
அத்துடன் நோய் அறிகுறி கொண்ட சிறுவர்களை ஓய்வாக வைத்திருக்குமாறும் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.