சீனாவின் எரிபொருள் தொழிற்துறைக்கு பிரித்தானியா உதவுகிறதா?

சீனாவின் எரிபொருள் தொழிற்துறைக்கு பிரித்தானியா உதவுகிறதா?

வெளிநாட்டு உதவியின் கீழ், சீனாவின் எரிபொருள் தொழிற்துறைக்கு பிரித்தானியா உதவுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பூச்சியம் காபன் உமிழ்வு மற்றும் காலநிலை மாற்றம் என்பவற்றில் பிரித்தானியா முன்னின்று செயற்படுகையில், இவற்றிற்கு நேரெதிரான ஒரு துறைக்கு பிரித்தானியா நிதியுதவி வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் வருடாந்த வருமானத்தில் 0.7 வீதம் வெளிநாட்டு தொழிற்துறைகளுக்கு வழங்கப்படுகிறது.

அந்தவகையில், சீனாவின் எரிபொருள் தொழிற்துறையில் குறித்த ஒதுக்கீட்டை பிரித்தானியா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலநிலை மாற்றத்தால் உலக வெப்பமயமாதல் அதிகரித்துச் செல்வதோடு, வறட்சி, வெள்ளம், வெப்பக்காற்று என உலக நாடுகள் பல அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கின்றன.

இந்நிலையில், எரிபொருள் தொழிற்துறையை ஊக்குவிக்கும் துறைக்கு மில்லியன் கணக்கான நிதி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக செலவிடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

பிரேசில், மெக்சிக்கோ மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிபொருள் துறைகளில் பிரித்தானியா இரண்டு மில்லியன் பவுண்களை செலவிட்டுள்ளதென சக்திவளம் தொடர்பான ஆய்வறிக்கையொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

காலநிலை மாற்றத்தை சமனாக பேணுவதற்கு, உலக நாடுகள் காபன் உமிழ்வை தடுக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. ஆனால், சூழலை அதிகமாக மாசுபடுத்தும் துறைகளில் ஏன் செலவிடப்படுகின்றதென்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net