பாலித தெவரப்பெரும தொடர்பில் விசாரணைக்கு குழு நியமனம்!
கடந்த வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் நிலையின்போது ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெரும கூரிய கருவி ஒன்றை வைத்திருந்தமை தொடர்பில் விசாரணை செய்ய நாடாளுமன்றக்குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.
சபாநாயகர் கரு ஜெயசூரிய இந்தக்குழுவை நியமிக்கவுள்ளார்
இது தொடர்பில் வீடியோ காட்சியை ஏற்கனவே கரு ஜெயசூரிய கோரியிருப்பதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் விசாரணைக்குழுவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஏற்கனவே வெலிக்கடை காவல்துறையினரும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் தாம் கத்தியை வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை பாலித தெவரப்பெரும மறுத்துள்ளார்.