ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய சின்னம் ‘டயமண்ட்’
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஒரு புதிய சின்னத்தின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அதன்படி டைமண்ட் சின்னத்தில் போட்டியிட கூட்டணியினர் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கையை தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் யானை சின்னத்திற்குப் பதிலாக ஒரு புதிய சின்னத்தின் கீழ் ஒரு கூட்டணியாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் சின்னம் தொடர்பில் கட்சிக்குள் இருதரப்பட்ட கருத்துக்கள் நிலவினாலும், தற்போது டைமண்ட் சின்னத்தில் போட்டியிட கூட்டணியினர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.