தெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி!
இத்தாலியின் தெற்கு பகுதியில் வீசிய கடும் சூறாவளியின் காரணமாக டொரிசனோ நகரம் பெரும் பேரழிவை சந்தித்துள்ளது.
டொரிசனோ நகரை சூறாவளி நேற்று (செவ்வாய்க்கிழமை) கடந்த நிலையில், பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், வீடுகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.
சூறாவளியின் காரணமாக டொரிசனோ நகரம் மாத்திரமின்றி, குரோட்டோன் மாகாணத்தின் கியூட்ரோ மற்றும் தென்மேற்று இத்தாலியின் சலேர்னோ ஆகிய நகரங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.