ஐ.தே.மு.-யின் ஜனநாயக போராட்டம் கண்டியில்!
‘நீதிக்கான குரல்’ என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் பாரிய ஜனநாயகப் போராட்டமொன்று இடம்பெற்றது.
கண்டியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற போராட்டத்தில் ஐ.தே.க. தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கலந்துக் கொண்டார்.
ஜனநாயகத்தை பாதுகாப்போம், மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு, கோஷமெழுப்பியவாறு இப்போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.
இன்று காலை மல்வத்து மகாவிகாரை மற்றும் அஸ்கிரிய மகாவிகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்ட முன்னாள் பிரதமர், மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர் ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரர் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.
அதனை தொடர்ந்து ஐக்கிய தேசிய முன்னணியின் ஏற்பாட்டிலான போராட்டத்தில் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.