கிளிநொச்சியில் சமகால அரசியல் கருத்தரங்கு.
கிளிநொச்சி ஆய்வு, அறிவியல் கழகத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் நெருக்கடிகள் பற்றிய கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று 24-11-2018 காலை பத்து மணிக்கு ஊடகவியலாளர் கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தெற்கின் அதிகார மோதலும் தமிழர் தரப்பின் அணுகுமுறைகளும் எனும் தலைமையில் ஆய்வாளர், ஊடகவியலாளருமான யதீந்திராவும், நாடு எங்கே போகிறது? அரசியல் குழுப்பமும் அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சுகளும் எனும் தலைப்பில் முன்னாள் விரிவுரையாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான சிராஜ் மஸ்ஹூரும் உரையாற்றினார்கள்.
தொடர்ந்து கலந்துரையாடல்களும் கலந்துகொண்டவர்களிள் கேள்விகளுக்கு பதில்களும் அளிக்கப்பட்டது.