ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக ராகவன் நியமனம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும், ஜனாதிபதியின் ஆலோசகராகவும் பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கலாநிதி சுரேன் ராகவனை ஊடகப்பிரிவு பணியாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராகவிருந்த, சமிந்த சிறிமல்வத்த, உடன் அமுலுக்கு வரும் வகையில், பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே, அவரது தனிப்பட்ட அதிகாரியாக சமிந்த சிறிமல்வத்த பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.