இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தெரிவுக்குழு நியமனம்!
aaaஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது.
அஜந்த டி மெல் தலைமையில் குறித்த புதிய கிரிக்கெட் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு இது தொடர்பாக அறிக்கையொன்றினை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
இதன்படி இந்த தெரிவுக்குழுவின் தலைவராக அஜந்த டி மெல் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சமிந்த மெண்டீஸ், ஹேமந்த விக்ரமரத்ன, சண்டிக ஹத்துரசிங்க ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.