என்னால் எதையும் செய்ய முடியாது! பிடிவாதமாக மைத்திரி!
ரணில் விக்ரமசிங்கவை ஒரு போதும் மீண்டும் பிரதமராக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் இந்த கேள்வியை கேட்க வேண்டாம் எனவும், ரணிலை ஒரு போதும் பிரதமராக்க மாட்டேன் என மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.
ரணிலுடன் மூன்றரை வருடங்கள் செயற்பட்ட போது ஏற்பட்ட விடயங்கள் காரணமாகவே தான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.