தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட் அமைப்பு வெளியேற்றப்படவில்லை!
தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட் அமைப்பு வெளியேற்றப்படவில்லை என அந்த அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
ஆதவனின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அண்மையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திலிருந்து புளொட் அமைப்பு வெளியேற்றப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் தம்மிடம் மன்னிப்பு கோரியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், தமிழ் மக்கள் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தமிழ் மக்கள் பேரவையின் அண்மைய கூட்டத்தின்போது புளொட் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டமை தமக்கு மிகுந்த கவலையளிப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.