பஸ்ஸுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞர் பலி!
குருநாகல் – நீர்கொழும்பு வீதியில் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் மல்கடுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிட்சை பலனின்றி உயிரிழத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.