யுத்தத்தினை ஒழிக்க வழங்கிய ஒத்துழைப்பே தற்போதும் எமக்குத் தேவை!
யுத்த காலத்தில் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பினை மக்கள் தற்போதும் எமக்கு வழங்கவேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அரசியல் குழப்பநிலை தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் மக்களிடையே குழப்பநிலையைத் தோற்றுவித்துள்ளது. நாம் நாட்டு மக்களுக்கான சிறந்த ஆட்சியினை வழங்கத் தயாராகவுள்ளோம்.
எமது கடந்தகால ஆட்சியில் பயங்கரவாதத்தினைத் தோற்கடிப்பதற்கு மக்கள் எமக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்பு தற்போதும் எமக்குத் தேவையாக இருக்கின்றது. தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நிலைக்கு எமது அரசாங்கத்தின் மூலமே தீர்வுகாண முடியும்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முன்னர் மக்கள் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பினை தற்போதும் நாம் கோரிநிற்கின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.