பாதுகாப்பற்ற கருத்தரிப்பை இல்லாதொழிப்போம் : வவுனியாவில் பெண்கள் போராட்டம்!
பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறைகளை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் டாபிந்து கெலக்டிவ் அமைப்பினரின் ஏற்பாட்டில் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் இன்று (25.11) காலை 11.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றதுடன் அதன் பின்னர் நெல்லிஸ்டார் விருந்தினர் விடுதியில் பெண்களுக்கான விழிப்புணர்வு கருந்தரங்கும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் டாபிந்து கெலக்டிவ் அமைப்பின் பிரதிநிதிகள், டிரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் அமைப்பின் பிரதிநிதி , குடும்ப நல உத்தியோகத்தர்கள் , வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பால்நிலை வன்முறைகள் , பெண்களுக்கு எதிரான வன்முறைகள் , அவற்றில் இருந்து எவ்வாறு தம்மை பாதுகாத்து கொள்ளலாம் , தேவையற்ற கர்ப்பங்களை எவ்வாறு தவிர்த்தல் , குடும்பத்திட்டமிடல் முறைகள் சட்டவிரோதமான கருக்கலைப்பினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது