யாழில் பிரபாகரன் வாழ்ந்த வீட்டுக்குச் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!
விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினம் இன்றாகும். இதை முன்னிட்டு வடக்கில் சில இடங்களில் அவருடைய பிறந்த தினம் கொண்டாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரனின் வீட்டை சுத்தம் செய்வதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் சென்றுள்ளனர்.
இவர்களை வல்வெட்டித்துறை பொலிஸார் பிடித்து அவர்களுடைய தேசிய அடையாள அட்டை மற்றும் சுத்தம் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து, அவர்களை விரட்டியடித்துள்ளனர்.