கரைச்சி பிரதேச சபை அமர்வில் பொலீஸார்!
கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வில் பொலீஸார் வரவழைக்கப்பட்டு வந்த வேகத்தில் திருப்பி அனுப்பபட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
இன்று(28) கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வு இடம்பெற்றது. இதன் போது ஆதனவரி பற்றி உரையாடிய போது எதிர்தரப்பு உறுப்பினர் ஒருவர் பசுமை பூங்காவில் பிரதேச சபைக்கு சொந்மான பசுமைபூங்கா பிரதேசத்தில் கேள்வி கோரல் எதுவுமின்றி தனிநபர் ஒருவருக்கு வியாபார நிலையம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
சட்ட நடைமுறைகள் எதுவும் பின்பற்றாது இவ்வாறு வியாபார நிலையங்கள் வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
இதன் போது குறுக்கிட்ட தவிசாளர் விசேட அமர்வில் இது பற்றி பேச முடியாது என்றார்.
ஆனால் மறுப்புத் தெரிவித்த எதிர்தரப்பு உறுப்பினர் தனக்கு இந்த விடயம் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என்றார்.
இச் சந்தர்ப்பத்தில் மற்றொரு உறுப்பினர் தவிசாளரை நோக்கி ஏற்கனவே சந்தையில் வியாபாரம் நிலையம் வைத்திருந்த ஒருவருக்கே பசுமைபூங்கா பிரதேசத்திலும் சபை நடைமுறைகளை மீறி வியாபார நிலையத்தை வழங்கப்பட்டுள்ளது என்றார் கை நீட்டி பேசவேண்டாம் என தவிசாளர் உறுப்பினரை பார்த்து கூறிய போது பதிலுக்கு உறுப்பினரும் தவிசாளரும் கை நீட்டி பேசக்கூடாது என்றார்.
இந்த கருத்து மோதலின் உச்சக் கட்டத்தில் உறுப்பினரான இ. இளங்கோ என்பவரை முப்பது நிமிடங்களுக்கு சபையிலிருந்து வெளியேற்றுவதாக தவிசாளர் அ. வேழமாலிகிதன் அறிவித்தார்.
அதனை உறுப்பினர் ஏற்க மறுக்க பிரதேச சபையின் செயலாளர் க. கம்சநாதனை பொலீஸ் நிலையத்திற்கு அனுப்பி சபை மண்டபத்திற்குள் அழைத்து வந்தார்
பொலீஸார் சபை மண்டபத்திற்குள் வந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த எதிர்தரப்பு உறுப்பினர்கள் உடனடியாக வருகை தந்த பொலீஸாரை சபையிலிருந்து வெளியேற்றினார்கள்.
இதற்கிடையில் சபை முதலில் முப்பது நிமிடங்களும் பின்னர் ஜந்து நிமிடங்களும் ஒத்திவைக்கப்பட்டது.