சம்பந்தனின் பதவி குறித்து எமக்கு எவ்வித பிரச்சினையுமில்லை!
பிரதமராக ரணில் விக்கரமசிங்கவும், மஹிந்த ராஜபக்ஷவும் வேண்டாம் எனவும், திருட்டு அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளமையானது வேடிக்கையாகவுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அதேவேளை சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவதில் எமக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை.
அவர் தனது பதவியை சரியாக வகிக்கின்றார் என்ற நிலைப்பாடு தமக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.