வடக்கில் மரக்கறியின் விலை அதிகரிப்பு
வடக்கில் கடந்த மாதம் ஏற்பட்ட புயல் மழை காரணமாக மரக்கறியின் விலை அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் வடக்கில் ஏற்பட்ட சீரற்ற காலைநிலை காரணமாக கிராம பகுதிகளில் நீர் நிறைந்தமையால் விளைச்சலில் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் ஏனைய பகுதிகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் மரக்கறி பற்றாக்குறை காரணமாக தம்புள்ளையிலிருந்து மரக்கறிகளை ஏற்றி வருவதற்கு அதிக கூலி செலுத்த வேண்டியுள்ள நிலையில் மரக்கறியின் விலை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.