வவுனியா நகரசபையில் வைக்கோல் பட்டறை என்ற வார்த்தையால் பாரிய சர்ச்சை!
வைக்கோல் பட்டறை என்ற வார்த்தையால் சர்ச்சை
வவுனியா நகரசபையின் 8ஆவது அமர்வு இன்று (28.11.2018) காலை 9.30மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் வவுனியா நகரசபை உறுப்பினர் பாலபிரசன்னா தனது கருத்தில் வைக்கோல் பட்டறை என்ற வசனத்தினை பாவித்தமையினால் சபையில் குழப்பநிலை ஏற்பட்டது.
வவுனியா நகரசபை உறுப்பினர் பாலபிரசன்னா தனது வட்டாரத்தின் அபிவிருத்தியில் தலையீட முடியாது. அவர் எனது வட்டாரத்தின் அபிவிருத்தி தொடர்பாக விடயத்திலிருந்து மீளபெற வேண்டுமேன என நகரசபை உறுப்பினர் இராஜலிங்கம் சபையில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த உறுப்பினர் பாலப்பிரசன்னா அவர் என்னால் முன்வைக்கப்படும் அபிவிருத்தி கோரிக்கைகளை வாபஸ் வாங்க வேண்டுமேன தெரிவித்தமை சிறுபிள்ளைத்தனமாகவுள்ளது.
எனக்கு உரிமையில்லையா? மக்களுக்கு சேவை செய்ய , பிழையிருந்தால் சுட்டிக்காட்டுங்கள் எல்லா வட்டாரமும் என்னால் பார்க்க முடியும் .
சொந்த தேவைக்காக நான் இல்லை, மக்களின் தேவைக்காகவே நான் கதைக்கின்றேன் என்றதுடன் வைக்கோல் பட்டறை போன்று என்ற வாசனத்தினையும் பாவித்திருந்தார்.
திடீரென எழுந்த நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் இவ் உயரிய சபையில் வார்த்தைப் பிரயோகங்கள் என்பது முக்கியமானது.
இன்றுடன் மூன்றாவது தடவையாக உறுப்பினர் பாலப்பிரசன்னா சபையின் போது அவமதிக்கின்ற சொற்பிரயோகயங்களை பிரயோகித்திருக்கின்றார். இவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையினை இந்த சபை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த உறுப்பினர் பாலப்பிரசன்னா வவுனியாவில் கடை சம்பந்தமாக ஒர் பிரச்சனை இடம்பெற்றது.
அந்த சமயத்தில் உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் என்னிடம் ஏன் நீங்கள் தொப்பி போட வில்லையா? பள்ளிக்கு போகவில்லையா என அப்படியெல்லாம் அவர்கள் கதைத்துள்ளனர்.
அதன் போது ஒரு பிரச்சனையுமில்லை. நான் இப்ப தேவையில்லாத கெட்ட வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்ளவில்லை
அவரின் கருத்திற்கு பதிலளித்த உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவும் இவர் சபையில் மூன்று தடவைகள் இவ்வாறான வார்த்தைப்பிரயோகங்கள் பேசியதற்கு சபையின் உள்ள உறுப்பினர்களின் ஆதாரங்களுடன் உங்களுக்கு தெரிவித்துள்ளேன் என தவிசாளரிடம் தெரிவித்தார்.
இதன் போது உறுப்பினர்களாக பாலப்பிரசன்னா மற்றும் சு.காண்டீபன் ஆகியோருக்கிடையில் பாரிய கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றன.
தவறான கருத்தினை தெரிவித்திருந்தால் வாபஸ் பெறுமாறு உறுப்பினர் பிரசன்னாவிற்கு தவிசாளர் தெரிவித்தார்.
நான் தவறான வார்த்தைப்பிரயோகம் எதுவுமே மேற்கொள்ளவில்லை நான் வைக்கோல்பட்டறை என்றே தெரிவித்திருந்தேன். இதில் என்ன தவறு உள்ளது? வாபஸ் பெற முடியாது என உறுப்பினர் தெரிவித்தார்.
இங்குள்ள சகல உறுப்பினர்களும் தங்களது வசனங்களை எவரினதும் மனது புன்படாவண்ணம் பேச வேண்டும். உறுப்பினர் பாலப்பிரசன்னா மன்னிப்பு கேட்க வேண்டுமென உறுப்பினர் சேனாதிராஜா தெரிவித்தார்.
அவமதிக்கின்ற சொற்பிரயோகங்களை மேற்கொள்ளப்படும் உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த உறுப்பினர் சேனாதிராஜா எங்களுக்கும் மூன்று சந்தர்ப்பங்கள் தந்ததன் பின்னரே நீங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.