கரு ஜயசூரியவை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய மஹிந்த தரப்பு!
ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் செயற்பாடு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் செயற்பாட்டை விமர்சிக்கும் ஆளும் தரப்பினர், அவரின் உருவப்பொம்மையை எரிந்து எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இந்த செயற்பாடு தனக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக சபாநாயகர் நாடாளுமன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.
கிராமத்தில் பிறந்த ஒருவராக திருஷ்டி பொம்மை எரிப்பது சிறந்த நடவடிக்கையாக நம்புவதனால் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் என்ற ரீதியில் நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு மதிப்பளித்து, நாடாளுமன்றத்தில் நிலையான உத்தரவுகளுக்கு மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமையவே தான் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ள மாட்டேன். அதற்கான எவ்வித அவசியமும் இல்லை. தான் போலி ஆவணங்களை தயாரிக்கவில்லை என சபாநாயகர் கருஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.