நாமலுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள ஹரின்
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
முதலாவது நடத்தப்பட வேண்டியது ஜனாதிபதி தேர்தலா? பொதுத் தேர்தலா? என்பது தொடர்பில் விவாதிப்பதற்கு பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு ஹரின் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு, ஹரின் பெர்ணான்டோ, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்கு வருகைத்தராமையினால், இவ்வாறு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு டுவிட்டரில் அழைப்பதாக ஹரின் குறிப்பிட்டுள்ளார்.