உயிராபத்து காரணத்திற்காக மீண்டும் பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதியிடம் விக்கி கோரிக்கை!
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், தனது தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் (புதன்கிழமை) பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மாகாண சபையின் பதவிக்காலம் ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் நிறைவடைந்துள்ளமையால் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொலிஸ்மா அதிபருக்கு அறிகையிடப்பட்ட என்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து என்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.