ஐந்தாம் திகதி புதிய பிரதமர்?
எதிர்வரும் ஐந்தம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதவியை வழங்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இன்று மாலை சந்தித்து பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கடந்த 14, 15, 16ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மையில்லை என பலரும் கூறிவருகின்றனர்.
இவ்வாறான நிலையில், எதிர்வரும் ஐந்தாம் திகதி புதிய பிரதமர் ஒருவர் நியமிக்க கூடிய சாத்தியம் காணப்படுவதாக அரசியல் தரப்பில் இருந்து அறியமுடிகின்றது.