கிளிநொச்சி பூநகரி பிரதேச மக்களிற்கு லைக்கா ஞானம் பவுண்டேசன் ஸ்தாபனத்தினரால் உலருணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
குறித்த உலருணவு பொதிகள் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள 575 குடும்பங்களிற்கு இன்று பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு குறித்த நிறுவனத்தினரால் உலருணவு பொதிகள், போர்வைகள் உள்ளிட்ட பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச மக்களிற்கு குறித்த பொருட்கள் பகிர்நதளிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் எஸ்கிருஸ்ணேந்திரன், கிளநொச்சி மாவட்ட இடர்முகாமைத்துவ உதவி பணிப்பாளர் இன்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.