மஹிந்த மூன்று வாரங்களில் 840 இலட்சம் செலவு!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 21 நாட்களில் தனது ஹெலிகொப்டர் பயணங்களுக்காக 840 இலட்சம் ரூபாயை செலவிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிதி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“தவறான வழியில் ஆட்சியை கைப்பற்றிய அரசு, மக்களின் பணத்தை வீணடித்துக்கொண்டு இருக்கின்றது.
ஆகையால் இவ்வரசாங்கத்தின் கட்டளைகளுக்கு அரச அதிகாரிகள் செவிசாய்க்க வேண்டிய அவசியமில்லை.
புதிய பிரதமர் மஹிந்த கடந்த 21 நாட்களில் ஹெலிகொப்டர் பயணங்களுக்காக 840 இலட்சம் ரூபாயை வீணாக செலவு செய்துள்ளார். ஆகையால்தான் பிரதமரின் அலுவலகத்துக்கு செலவிடப்படும் நிதி தொகைகளை முடக்குமாறு கோரி இப்பிரேரணையை சமர்ப்பிக்கிறேன்.
மேலும் நாம் நீதிமன்றத்தின் ஊடாக தற்காலிக வெற்றியை பெற்றுள்ளோம்” எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.