வவுனியா ஓமந்தை மத்தியகல்லூரியில் புதிய கட்டடம் திறந்து வைப்பு.
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் இன்று (30.11) காலை 11 மணியளவில் விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர்கள் கட்டிடம் ஒன்று முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா தெற்கு தமிழ்பிரதேச சபையின் உறுப்பினர் கோ.அஞ்சலா குறித்த கட்டிடத்தை திறந்து வைத்திருந்தார்.
பாடசாலையின் அதிபர் கே.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரதி அதிபர் கு.சிவமலரும், கௌரவ விருந்தினராக ஆசிரியரும், பழைய மாணவனுமான சந்திரமோகன், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கட்டிடத்திற்கான நிதி உதவியை பிரான்சில் வசிப்பவரும், பாடசாலையின் பழைய மாணவனுமான சுப்பிரமணியம் சிவகுமாரன் இரண்டு இலட்சம் ரூபாய் நிதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.