லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளது!
லங்கா – இந்தியன் ஒயில் நிறுவனமும் (ஐ.ஓ.சி) நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் எரிபொருட்களின் விலைகளை நேற்று (வௌ்ளிக்கிழமை) முதல் குறைப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது நாடளாவிய ரீதியான எரிபொருள் விற்பனை நிலையங்களில் விலைகளை குறைப்பதாக தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசல் என்பன 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.