விமான சேவை முறைகேடு; ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு
ஸ்ரீலங்கன் விமான சேவை , ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடிகளை விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இவ்வாறு அதன் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ கால எல்லை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி நிறைவடையவிருந்த நிலையில், அதன் கால எல்லை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.