கவர்ச்சியாக உடையணிந்து வந்த எகிப்து நடிகை மீது வழக்கு பதிவு!
எகிப்தில் இடம்பெற்ற திரைப்பட விழாவில் நடிகை ஒருவர் படும் கவர்ச்சியாக ஆடை அணிந்து வந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக நடிகைகள் திரைப்பட விழா அல்லது திரைப்பட விரிவாக்கல் செயற்பாடுகளுக்கு செல்லும் போது அரை குறையாகவும் கவர்ச்சியாகவும் ஆடை அணிவது வழக்கம்.
அதில் பெரும்பாலும் இந்திய நடிகைகள் அரைகுறையாக ஆடை அணிந்து அதனை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் எகிப்தில் ராணியா யூசஃப் என்ற நடிகை கெய்ரோ திரைப்பட விழாவில் தனது தொடைகள் தெரியும்படி ஆடை அணிந்து வந்தார்.
அவர் இச்சையைத் தூண்டும் வகையில்’ ஆடை அணிந்ததாக கூறி வழக்கறிஞர்கள் இருவர் பொது நல வழக்கு தொடுத்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த நடிகை, இந்த விடயம் பாரிய விளைவை ஏற்படுத்தும் என தெரிந்திருந்தால் நான் அந்த ஆடையை அணிந்திருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என அவர் கூறியுள்ளார்.