தென்னிந்திய திருச்சபையின் வருடாந்த பிள்ளைகள் விழா நேற்று சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது
தென்னிந்திய திருச்சபையின் வருடாந்த பிள்ளைகள் விழா நேற்று சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாணஆதீனத்தின் கீழ் உள்ள அனைத்து திருச்சபைகளின் சிறுவர்களை ஒன்றிதை்து, சமய மற்றும் கலை அறிவுகளை ஊக்குவிக்கும் வகையில், வருடம் தோறும் இடம்பெறும் குறித்த பிள்ளைகள் விழா இடம்பெற்று வருகின்றது.
2018ம் ஆண்டு குறித்த பிள்ளைகள் விழா நேற்று சனிக்கிழமை யாழ் வட்டுக்குாட்டையில் அமைந்துள்ள தலைமை பேராலய மண்டபத்தில் இடம்பெற்றத. குறித்த விழாவிற்கு வடக்கு கிழக்கு, கொழும்பு மற்றும் மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வு காலை 9 மணியளவில் விசேட வழிபாட்டினை தொடர்ந்து தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வண கலாநிதி டானியேல் எஸ் தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது.
சிறார்களிற்காக குழு பாடல், தனிப்பாடல், விருத்தம், மனனவசனம், சித்திரம், கட்டுரை, வேதாகம புதிர் போட்டிகள் என பிராந்திய ரீதியில் இடம்பெற்றதுடன், 14 வயதுமற்றும் 19 வயது பிரிவினருக்கான பேராயர் கிண்ண வேதாகம புதிர் போட்டிகளும் இடம்பெற்றன்.
குறித்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களின்கு வெற்றி கிண்ணங்களும், சான்றிதள்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் திருச்சபை ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.