இலங்கையில் அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தியவர் அரசியலுக்குள் நுழைவாரா?
குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள், தான் கட்சி அரசியலுக்கு வருவதற்கு விருப்பமில்லாததன் காரணமாக அரசியலுக்கு வரவிருந்த தீர்மானத்தை மாற்றிக்கொண்டுள்ளேன் என ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் தொடர்ந்தும் ஊழல், மோசடி தொடர்பான விடயங்களை அம்பலப்படுத்தி நாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் பிரிதிநிதிகளுக்கு மேலாக நாட்டிற்கு சேவை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்போவதாகவும் அதன் முதலாவது கட்டமாக எதிர்வரும் 5ஆம் திகதி அம்பாறை மஹஓய நகரில் கூட்டம் இடம்பெறவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக இவரால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதன் விளைவே நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டதுடன், இன்றுவரை நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைக்கும் காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.