தோட்டத் தொழிலாளர்கள் நாளை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில்!
தோட்டத் தொழிலாளர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இந்த விடயம் தொடர்பில் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட கம்பனிகளுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கும் வரையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.