மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து 239 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து 239 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை வரை 239 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் சில வாரங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 27ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவகையில் குறித்த புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று திங்கட்கிழமை 109 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் குறித்த அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இதுவரையில் 239 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அகழ்வு பணிகள் இடம்பெற்றுவரும் நிலப்பகுதி விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், விஸ்தரிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படுவதை தெரிவித்துள்ளனர்.

அகழ்வு இடம் பெறும் இடத்தில் தேங்கி இருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டு தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றன.

Copyright © 3454 Mukadu · All rights reserved · designed by Speed IT net