மைத்திரியுடனான சந்திப்பில் சம்பந்தன் கேட்ட ஒரு கேள்வி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இன்று மாலை இடம்பெற்ற சந்திப்பு நிறைவடைந்துள்ளது.
குறித்த சந்திப்பின்மூலம் எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை எனவும் மூன்று வாரத்தில் மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஜனதிபதியை கொலை செய்ய முயற்சித்தவரையே பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முடியும் என்றால் ஏன் ஏனையோரை விடுவிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.