எலிக் காய்ச்சல்: 10 பேர் உயிரிழப்பு
பொலன்னறுவை மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரச் சேவை அறிவித்துள்ளது.
எலிக் காய்ச்சலினால் அதிகரித்துள்ள உயிரிழப்பு தொடர்பில் சுகாதார சேவை பணிப்பாளர், டொக்டர் சரத் ஜயசிங்க நேற்று (திங்கட்கிழமை) இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“கடந்த 3 வாரங்களில் இப்பகுதியில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள், எலிக் காய்ச்சலினால் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு காரணம் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய வகையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு முனையாதமையே ஆகும்.
எனவே தான், எலிக்காய்ச்சல் தொடர்பில் பொலன்னறுவை சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இவ்விடயம் தொடர்பில் விழிப்புணர்வு ஆலோசனைகளை தற்போது வழங்கி வருகின்றோம்” என சரத் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.