கரைச்சி பிரதேச கலாச்சார விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு காலை 10 மணியளவில் ஆரம்பமாகியது.
வடமாகாண கலாச்சார திணைக்களம் மற்றம் கரைச்சி பிரதேச கலாச்சார பேரவை ஆகியன இணைந்து கரைச்சி பிரதேச கலாச்சார நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த விழா கரைச்சி பிரதேச கலாச்சார பேரவை தலைவரும், கரைச்சி பிரதேச செயலாளருமான ரி.முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டதுடன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கரைச்சி பிரதேசத்தில் நீண்டகாலம் கலைத்துறையில் சேவையாற்றிய திருமாதி பார்வதி சிவபாதம் அவர்கள் விழா ஏற்பாட்டாளர்களால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.
அரங்கில் தமிழ் கலை கலாச்சார மற்றம் கிராமிய நிகழ்வுகள் அலங்கரித்தமை குறிப்பிடதக்கதாகும்.