சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாடு இன்று!
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
குறித்த மாநாடு, கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘நாடு தொடர்பிலான தீர்மானம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இம்மாநாடு இன்று நடைபெறவுள்ளது.
குறித்த மாநாட்டில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பிலேயே இம்மாநாட்டில் அதிகளவு கலந்துரையாடப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.