யாழில் அரச உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு!
யாழில் சமுர்த்தி வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது நேற்றைய தினம் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் உள்ள சமுர்த்தி வங்கியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த வங்கி உத்தியோகத்தர் மீதே வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான உத்தியோகத்தர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வங்கியின் பின் பக்க மதிலால் ஏறி குதித்து வந்த நால்வரே தன் மீது தாக்குதல் நடத்திவிட்டு தனது கைத்தொலைபேசியையும் அபகரித்து சென்றதாக பொலிஸாரிடம் தாக்குதலுக்கு இலக்கானவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.