ரணில் என்னையும் நாசமாக்கியதால் அவரை விரட்டிவிட்டேன்!
நல்லாட்சியின் கொள்கையையும் சீரழித்து ஐக்கிய தேசியக் கட்சியையும் சீரழித்தது என்னையும் சீரழித்தமையால் நான் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விரட்டியடித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு சுகததாச உள்ளக அரங்கில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
“நான் கடந்த 26 ஆம் திகதி எடுத்த தீர்மானமானது அன்றைய விட இன்றும் சரியானது.
ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தது எதேர்ச்சையான நிகழ்வு அல்ல கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடந்து வந்த கசப்பான அனுபவங்களின் விளைவாகும்.
ரணில் விக்கிரமசிங்க தனக்கு விருப்பமான முறையில் மிக மோசமான நிலைக்கு ஆட்சியை கொண்டு சென்றார். ஒரு கட்டத்தில் என்னையும் அவர் கெடுத்துவிட்டார்.
இதேவைளை, ரணில் வடக்கு மக்களை ஏமாற்றினார். தொழிலாளிகளை ஏமாற்றினார்.
நல்லாட்சியின் கொள்கையையும் சீரழித்து ஐக்கிய தேசியக் கட்சியையும் சீரழித்தது என்னையும் சீரழித்தமையால் நான் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விரட்டியடித்தேன்.
நாட்டின் நீதிமன்றம் பக்கச்சார்பாக செயற்படுவதாக ஒருதரப்பு மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் எனவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.