வாகன விபத்தில் ஒருவர் பலி ; மூவர் படுகாயம்!
கண்டி – மாத்தளை பிரதான வீதியில் அக்குறணை நகரில் இன்று ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துடன் மேலும் மூவர் படு காயங்களுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தம்புள்ளை பிரதேசத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 45 அடி தூரம் வழுக்கிச் சென்று எதிரே வந்துள்ள கெப் ரக வாகனம் ஒன்றில் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்தோகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான ஜீப் வண்டியில் பயணித்த நான்கு பேர் அக்குறணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய மூவரும் மேலதிக சிகிற்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ் விபத்தில் உயிரிழந்தவர் ஹபரண பிரதேசத்தை சேர்ந்த ருச்சிர ஜயசிங்க என்ற 28 வயதுடையவராவார். இவரது சடலம் தற்போது அக்குறணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை இடம்பெற உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸ் நிலைய பொரறுப்பதிகாரி ஏக்கநாயக்க இலங்கசிங்க தலமையில் போக்குவருத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.