91 வயது பாட்டியை காதலிக்கும் 31 வயது இளைஞன்!
91 வயது பாட்டி ஒருவரை 31 வயது இளைஞன் காதலித்து வரும் சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில் இதுபோன்று வினோதமாக இருக்கும் காதலர்களை படம்பிடித்து காட்டுவது வழக்க்கம்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பரபரப்பாக பேசப்படும் ஜோடியாக அமெரிக்காவைச் சேர்ந்த கைல் ஜோன்ஸ் (31) மற்றும் கனடாவைச் சேர்ந்த மார்ஜோரி மெக்குல் (91) ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இடையே 60 வயது வித்தியாசம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட காதலை பற்றி அனைவரும் வியப்பாக பார்த்து வருகின்றனர்.
இதுபற்றி ஜோன்ஸ் பேசுகையில்,
ஒரு சில ஆண்களுக்கு வயதான பெண்களை தான் பிடிக்கும். அதை போல தான் எனக்கும், வயதானவர்களை பிடித்ததால் இவரைக் காதலிக்கிறேன் என்றார்.
இதுகுறித்து மார்ஜோரி கூறுகையில்,
நான் ஆரம்பத்தில் அவனை என்னுடைய ஒரு மகன் போல தான் நினைத்தேன். பிறகு பழக ஆரம்பித்ததும் அவனை பிடித்துவிட்டது என்று கூறியுள்ளார்.