இறைச்சி கடத்திய இரு இளைஞர்கள் கைது!
பசு மாட்டினை திருடி வெட்டி , அதன் இறைச்சியினை முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டு இருந்த பாட்டு பெட்டியினுள் வைத்து கடத்திய இருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஊர்காவற்துறை பகுதியில் பசுமாடு ஒன்றினை களவாடி அதனை இறைச்சியாக்கி முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற போது , ஊர்காவற்துறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த முச்சக்கர வண்டியினை மறித்து சோதனையிட்ட போது நூதன முறையில் பாட்டு பெட்டிக்குள் இறைச்சி மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீட்டனர்.
இறைச்சியை மீட்ட பொலிஸார் முச்சகர வண்டியில் இருந்த இரு இளைஞர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் யாழ்.பொம்மைவெளி பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸார் போலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.