மட்டக்களப்பில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் பலி!
மட்டக்களப்பில் இன்று அதிகாலை புகையிரதத்தடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பயணித்த புகையிரதத்துடனே இவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் பிரேரத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.