யாழில் ஒட்டப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள்!
‘வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் டாலர்களுக்காக சமாதானத்தை அழிக்க அனுமதிக்கப் போகிறோமா” எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ஆயினும் இத் துண்டுப் பிரசுரங்கள் யாரால் வெளியிடப்பட்டது அல்லது யாரால் ஒட்டப்பட்டன என்பது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை பாடசாலை மாணவர்களின் சீருடையை இல்லாமல் செய்த மைத்திரி, மகிந்த, ரணில் அதிகார சூதாட்டத்திற்கு எதிராக அணி திரள்வோம் எனக்குறிப்பிடப்பட்டு இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினாலும் யாழில் பல இடங்களில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.