“ஜனாதிபதி சிறிசேன சரியான முடிவை எடுப்பார்”!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பிற்கு இணங்க செயற்பட்டு சரியான முடிவை எடுப்பார் என ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் அலரிமாளிகையில் நேற்று (புதன்கிழமை) வெளிநாட்டு இராஜதந்திரிகள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
குறித்த சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பிற்கு இணங்க பணியாற்ற தயாராக இருக்கின்றாரா என்பது தனக்கு தெரியவில்லை என ரணில் தெரிவித்ததாக ஐக்கிய தேசியக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.