வவுனியாவில் விபத்து: காலை இழந்த பெண்!
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளதுடன் இதன் காரணமாக படுகாயமடைந்த பெண்ணின் கால் அகற்றப்பட்டுள்ளது.
மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி நேற்று முன்தினம் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்று, செட்டிகுளம் வீதி வழியே செல்லும் போது மாடுகளை கலைத்து சென்று கொண்டிருந்த வயோதிபப் பெண்ணை மோதியுள்ளது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான 75 வயதான குறித்த வயோதிபப் பெண்ணை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த பெண் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் காலில் பலத்த காயம் ஏற்பட்டமையால் நேற்று அவருடைய ஒரு கால் அகற்றபட்டுள்ளது.
பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட குறித்த வாகன சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.