வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!
திருகோணமலையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த சுமார் 250 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த பொதிகள் பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, தனியார் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முஹம்மது பாத்திஹ் கஸ்ஸாலி மற்றும் இன்னுமொரு தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றலுடன் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இணங்கண்டு உலர் உணவு திட்டங்கள் நிவாரணமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.