வவுனியா சிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தந்தை திடீர் கைது!!
வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து மகனுக்கு கொடுக்க முற்பட்ட தந்தையை நேற்று (08.12) மதியம் 1.30 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகளின் கைது செய்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சிறையில் உள்ள மகனை பார்வையிட்டு பொருட்கள் கொடுப்பதற்காக நேற்று மதியம் தந்தை சிறைச்சாலை வளாகத்தினுள் சென்றுள்ளார்.
கொண்டு சென்ற பொருட்களில் சவற்காரத்தினை வெட்டி அதனுள் ஹெரோயின் போதைப்பொருளை வைத்து மகனுக்கு கொடுக்க முற்பட்ட சமயத்திலே தந்தையை கைது செய்துள்ளதாகவும் நெளுக்குளம் பகுதியினைச் சேர்ந்த 71 வயதுடையவரிடமிருந்து 45 மில்லிகிராம் ஹெரோயினை மீட்டுள்ளதாகவும் மகனும் ஹெரோயின் வைத்திருந்ததன் குற்றச்சாட்டிலே சிறைச்சாலைக்கு சென்றிருந்தார் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.