நாட்டைக் குழப்புவோருக்கு எதிராக புதிய சட்டம் தேவை!
அரசியலமைப்பு சட்டத்தை மீறி நாட்டின் ஒழுங்கமைப்பைக் குழப்புபவர்களுக்கு எதிராக புதிய சட்டங்கள் கொண்டு வரப்படவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டினது அரசியல் குழப்பநிலை தொடர்பில் (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டினது அமைதியினைக் குழப்பும் வகையில் சதி நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அதியுச்சத் தண்டனைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்.
இதற்கான ஆணைக்குழுவொன்றை அமைக்கும் பிரேரணையொன்றை மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளது.
குறித்த பிரேரணை தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரது பிரேரணையாக இந்த சட்ட மூலம் முன்வைக்கப்படவுள்ளது” என விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.