சட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த 4 மீனவர்கள் கைது!
சட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த குற்றச்சாட்டில் மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஐந்து ஆமைகளை மீட்டுள்ளதாக யாழ்ப்பாண கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
“யாழ்பபாணம், குருநகர் பகுதியில் வைத்து அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து மூன்று கடல் ஆமைகள் மீட்கப்பட்டதோடு நெடுந்தீவு பகுதியில் வைத்து இரண்டு ஆமைகளுடன் மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் நால்வருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
உயிருடன் காணப்பட்ட ஆமைகள் ஐந்தையும் மீண்டும் கடற்பரப்பில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.